இமயம் முதல் குமரி வரைப் பரவியுள்ள இந்தியத் திருநாட்டில் அமைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. இதனை வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்று நன்நூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டில் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின் தமிழ் மொழி பேசப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.
வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்
குமரி முனைக்கு தெற்கே உள்ள இந்துமாக்கடல் பகுதி குமரிக்கண்டம் என்றழைக்கப்பட்டது. கடற்கோளால் மூழ்கிப்போன குமரி கண்டத்தில் தான் பல்லுயிர்களும் பெருக்குதற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது. அங்கு தோன்றிய முதல் மனிதர்கள் பேசிய மொழி தமிழ் மொழியாகும்.
லெமூரியாக் கண்டம்
இதற்கு முன்பு ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் பகுதியில் லெமூர் என்னும் குரங்கினம் வாழ்ந்ததால் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்டது. அங்கு தோன்றிய மனிதகுரங்கே முதல் மனிதன் பிறக்க காரணம்.குமரிக்கு தெற்கே இருந்த பகுதியில் தான் முதல் மனித இனம் தோன்றியது அவர்கள் பேசிய மொழியின் மூலமே தொல்தமிழ்.அவர்கள் வழிவந்த மரபினர் வாழும் நிலமே தமிழ்நாடு.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
பழைய கற்காலம்
புதிய கற்கலாம்
உலோகக் காலம்
பெருங்கற்காலம்
பழைய கற்காலம்
கி.மு. 10000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.
குவார்ட்சைட் என்ற கற்களை வேட்டையாடும் கருவியாக பயன்படுத்தினர்.
சென்னை பல்லவரத்தில் ராபர்ட் புரூஸ் பூட் என்பவர் பழைய கற்கால கருவிகளை கண்டறிந்தார்.
இரண்டு சிக்கிமுக்கி கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கினர்.
உணவை தேடும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்தனர்.
பயிரிடுதல், மட்பாண்டங்கள் செய்தல் ,இறைவன், சமயம் குறித்த சிந்தனை போன்றவற்றை அறிந்திருக்கவில்லை.
புதிய கற்காலம்
கிமு 10000 முதல் கிமு 6000 வரை
ஓரிடத்தில் கூட்டமாக வாழ்ந்தனர்
களிமண் குடிசை,கூரை வீடுகளில் வாழ்ந்தனர்.
வேளாண்மை முக்கிய தொழிலாகும்.மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர்.
நாய், ஆடு, மாடு, பசு, எருது, போன்றவற்றை வளர்த்தனர்.
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது, நெசவுத் தொழிலை அறிந்திருந்தனர்.
இறந்தோரின் உடல் மண்தாழியில் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்தோரை வழிபட்டனர்.
திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, தான்றிக்குடி, திருச்சி போன்ற இடங்களில் கருவிகள் மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
பெருங்கற்காலம்
பெருங்கல் என்னும் சொல்லுகு நீர்த்தார் நினைவு சின்னம் என்று பொருள்.
சிகப்பு மற்றும் கருப்பு மண் தாழிகுள் இற்ந்தோரின் உடலை வைத்து அதன் மேல் பாறைகல்களை வட்டமாக அடுக்கி வைத்தனர்.
இந்த சின்னங்கள் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, புதுகோட்டையிலும் கண்டெடுகப்பட்டுள்ளன.
வரலாற்றுக்காலம்:
கடைச்சங்கத்தில் புலவர்கள் கூடி ஆய்வு செய்த சங்ககாலமெ வரலாற்றுக்காலம். திமு 200 திமு 400 வரை ஆகும்.
திருகுறளை பாரட்டி தேசியகவி பாரதியார் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு என்று பாரடியுள்ளார்.
பிறமொழிகளின் துணை இல்லாததல் உயர்தனிச்செம்மொழி ஆகும்.
தமிழக வரலாற்றை தொகுக்க உதவும் கல்வெட்டுகள்2ம் நூற்றாண்ட் முதல் காணப்படுகின்றன. இவை பல்லவர்கால கல்வெட்டுகளாகும்.
25000 கல்வெடுகள் இருப்பதாகவும், பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சியிலும், அரிக்கமேட்டிலும் கண்டேடுக்கப்பட்டுள்ளன..
2ம்சிம்மவர்மனின் 6ம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட பள்ளன் கோவில் செப்புபட்டயங்கள் வடமொழியும், தமிழும் கலந்தவையாகும்.
சோழபேர காலத்தின் செப்பேடுசாசனங்களில் கூறப்படும் மெய்கீர்த்திகள் பெரியவையாகும். இவற்றில் திருவலாங்கட்டு செப்பெடு மாபெரும் செப்பேடாகும்.
பொதுவாக இவை வாழ்த்து பாடல்களுடன் தொடங்கின. கொடையளித்தவரின் மெய்கீர்த்தி, பரம்பரை வரலாறு, நன்கொடையின் முழு விவரம், பெருபவரின் பெயரும் வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன.