views

Wednesday, 28 August 2019

தசரதனின் முற்பிறப்பும் அவருக்கு திருமால் அளித்த வரமும்



தசரதனின் முற்பிறப்பும் அவருக்கு திருமால்  அளித்த வரமும்

     சிறந்த நீர் வளமும் நிலமும்  குடிமக்களும் வாழ்ந்த நாடு கோசல நாடு.அதன் தலைநகரம் அயோத்தி என்பதாகும்.  அங்கே வாழும் மக்கள் யாருக்கும் தீங்கு செய்யாமலும் எல்லா நலன்களும் பெற்று இன்பதுடன் வாழ்ந்தனர்.

     அயோத்தி என்ற சொல்லுக்கு யுத்தமில்லாத ஊர் என்று பொருள். அந்த நகரை ஆண்ட ஆதித்தன் குலத்தில் அஜமாகராஜனுக்கும், இந்துமதிக்கும் பிறந்தவர் தான் தசரதன்.  பத்து ரதங்களை வென்றதால் தசரதன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. அவருடைய ஆடசியில் தருமம், கருணை சிறந்து விளங்கியது. மக்களுக்கும் பகைவர்கள், கள்வர்கள், விலங்குகளின் துன்பம் இன்றி வாழ்ந்தனர்.

     இவர் கௌசலை, கைகேயி, சுமித்திரையை மணந்து  64000  ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னரும் குழந்தைப்பேறு இல்லாததால் மிகவும் வருந்தனார்.  மக்கள் என்ன தான் சிறப்புற வாழ்ந்தாலும் தன்னை வாழ்தினாலும் குழந்தை இல்லாதது அவருக்கு மிகப்பெரிய துன்பமாக இருந்தது.
     அதனால் தன்னுடைய அரசவையின் குலகுருவான வசிஸ்டரிடம் கூறலானார்.  பிரம்மபுத்திரரை குலகுருவாக கொண்ட எனக்கு மகப்பேரில்லை என்பது எனக்கு துன்பமளிக்கிறது.  என்னுடைய மனுகுலத்தில் பிறந்தவர்களுக்கு  இந்தமாதிரி நடந்ததே இல்லை. வானளவு வளர்ந்த மரம் அனைவருக்கும் நிழல் தந்தால் மட்டும் போதுமா? பழுக்கவில்லை என்றால் என்ன பயன் என்ன பயன் என்று கூறவும் வசிஸ்டர் சிறிது நேரம் சிந்தனை செய்த பின்னர் தன் கண்களை மூடி ஞானக்கண் திறந்து பார்த்தார். 

       திருமால் திருப்பாற்கடலில் துயிலும் போது ராவணனின் ஆதிக்கத்தால் துன்பமடைந்த பிரம்மன் முதலான தேவாதி தேவர்களும் அவரை சரன்னடைந்து தங்களது துன்பத்தை தெரிவித்தனர்.  திருமால் அவர்களை நோக்கி தேவர்களை நான் பூவுலகில் ராமனாக அவதரித்து ராவணனை வீழ்த்தி தங்களுடைய துன்பத்தை நீகுவேன்.

     நான் பூமியில் மனிதனாகவும், தேவர்களாகிய நீங்கள் வாநரங்களாகவும் பிறக்குமறு கட்டளையிட்டார்.  அவரின் கட்டளைப்படி இந்திரன் வாலியாகவும், சூரியன் சுக்கிரனாகவும் அக்கினித்தேவன் நீலநகவும், வாயுதேவன் அனுமன் ஆகவும் உபேந்திரன் அங்கதவனாகவும், பிரம்மன் ஜாம்பவனாகவும், திருமாலுடைய சக்கரம் பரதராகவும், சங்கு சத்ருக்கணகவும், ஆதிசேஷன் இலக்குமனகவும், திருமகள் சீதாதேவியாகவும் பிறக்குமாறு  கட்டளையிட்டார்.

     மேலும் தான் ஏற்கனவே, பூலோகத்தில் வாழ்ந்த ஒரு முனிவரின் மனைவி தன் கணவன் கூறுவதற்கு எதிர்மாறாக நடந்து வந்தாள். அதனால் அம்முனிவர் மிகவும் துன்பமடைந்த போது வழிபோக்கர் ஒருவர் நீ உன் மனதில் நினைப்பதை நீ எதிர்மாறாக கூறினால் அவள் அந்த வேலையை மாற்றி செய்வாள் என்று கூறவும் அவரும் சாதம் செய்யவேண்டாம் என்று கூறினால் சத்தம் செய்வாள், சுடிதண்ணீர் குளிக்க கூடாது என்று கூறினால் சுடுநீர் வைத்து தருவாள். அப்படியிருக்க ஒருநாள் அவர் தன்னுடைய முத்தோர்களுக்கு பிதுர் பூசை செய்து பிண்டத்தை நல்ல நீரில் போட்டு வேண்டும் என்று மறந்து மாற்றி கூறிவிட்டார்.  அவள் எதிர்மாறாக சுத்தமில்லாத நீரில் கொடியதால் அவருக்கு கோபம் வந்து இவ்வளவு நாள் நீ செய்தவற்றை பார்த்து பொறுமையாக இருந்தேன். இப்போது செய்த தவறை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது. நீ பேயாக மாறுவாய் என்று சாபமிட்டார்.

     அந்த பெண் பேய் தவம் செய்துகொண்டிருந்த தர்மங்கத்தார் என்ற முனிவரை பிடிக்கச்சென்ற போது அவர் தன் கமண்டலத்தில் உள்ள நீர் எடுத்து அந்த பெண்ணின் மேல் தொளிக்க சாபவிமோசனம் பெற்று இருவரும் வைகுண்டம் சென்ற போது திருமால் அவரின் பக்தியை பாராட்டி தர்மங்கதரே நீ பூவுலகில் ஆதித்தர் குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயரில் பிறப்பாயாக நான் உனக்கு மகனாக பிறப்பேன்.  அம்மா கலகை நீ கேகேய நாட்டில் அசுவபதி என்ற மன்னனுக்கு மகளாக பிறந்து கைகேயி என்ற பெயரில்  பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெருமையுடன் வாழ்வாய். சமயம் வரும்பொழுது கலகம் செய்து என்னை கானகம் செல்ல சொல்வாய் என்று கூறினார்.
இந்தக் காட்சிகளை ஞானக்கண்ணில் கண்டார் வசிஷ்ட முனிவர்.