ராமபிரான்
அவதாரம் விசுவாமித்திரர் வருகையும்
வசிஷ்டர் ஞானக்கண்ணால்
கண்டபிறகு தசரதனிடம் உனக்கு மக்கட்பேறு
சீக்கிரம் கிடைக்கும்.அங்கநாட்டில் மனுக்குலத்தில் பிறந்த உத்தனப்பதனுடைய புதல்வன்
ரோமப்பதான் ஆட்சியில் 12 ஆண்டுகளாக மழையில்லாமல் பஞ்சம்
இருக்கவும் அங்கு கலைக்கோட்டு முனிவர் வருகை புரிந்ததால் மழை பெய்து வளம்
செழித்தது. அவர் அளவற்ற தவம் செய்தவர்.
ஆகவே அவரை அழைத்து வந்து
புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும் என்று கூறினார். அதனால்
தசரத மன்னனும் தன்னுடைய பரிவாரங்கள் சூழ அந்நாட்டை அடைந்து அம்மன்னிடம் முனிவரை
தம் நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு
கேட்டார்.
தசரதனின் வேண்டுகோளுக்கிணங்க
கலைக்கோட்டு முனிவர் என்கிற ரிஷியசிருங்கர் தன் மனைவி காந்தையுடன் அயோத்தி
மாநகருக்கு வருகைபுரிய தசரதன் ஓராண்டு
அவருக்கு பணிவிடைகள் செய்தார். அவரின் பணிவிடைகளால் மகிழ்ந்தவர் தசரதனின் துன்பத்தை
போக்க புத்திர காமேஷ்டி யாகத்தை நகற்புறதே தவசீலர்கள் துணைபுரிய வேதமந்திரங்களை
கூறி வேள்வியை செய்தார்.
யாககுண்டத்தில் ஒரு
தெய்வபூதம் தோன்றி யாகபாயசத்தை வழங்கி மறைந்தது. முனிவர் மன்னரிடம் கௌசலைக்கும்
கைகேயிக்கும் கொடுக்குமாறு கூறினார். கொடுத்து பழகிய அவ்விருவரும் பாதியை
சுமித்திரைக்கு கொடுத்தனர். மூவரும்
கருவுற்றார்கள்.
12மாதம் கருவுற்றிந்தார்கள்.
எவ்வாறெனில் ஆன்மாக்கள் விண்ணிலிருந்து மழையாக பூமியை வந்தடைந்து காய்கனி
தானியங்களில் கலந்து தந்தையின் வயிற்றில் 2 மாதங்களும் பிறகு
தாய் வயிற்றில் 10 மாதங்களும் கருவாக இருந்து தான்
பிறக்கின்றன.
சித்திரை மாதம் நவமி திதியில்
புணர்வசு நட்சத்திரம் கடக லக்னத்தில் திரு ராமபிரான் அவதரித்தர். மறுநாள் பூச
நட்சத்திரதில் பரதரும், அதற்கு மறுநாள் ஆயில்ய
நட்சத்திரத்தில் இலட்சுமணனும்,சத்ருக்கணும் பிறந்தனர்.தசரத
மன்னனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தன்னுடைய கருவூலத்தில் இருந்த பொன்னையும், பொருளையும், வஸ்திரங்களையும் அனைவர்க்கும் வரி
வழங்கினார். அவர்களும் 4 வேதங்களை போல் வளர்த்தனர். 5 வயதிற்கு மேல்
வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளர்ந்து ஆயக்கலை 64 ம் கற்றனர்.
12 வயது நிறைவடைந்த பொழுது
சகலக்கலைகளிலும் வல்லவராகவும் நல்லவராகவும் சிறந்து விளங்கினார். காயத்ரி மந்திரத்துக்கு அதிபதிவும் அளவற்ற
தவமும் செய்த விசுவாமித்திரர் தசரதனின் அரண்மனைக்கு எழுந்தருளினார். கடைகாவலன் மன்னனிடம் முனிவரின்
வருகையை கூறியவுடன் அனைவரும் அவரை பணிவுடன் வாயிற்படி சென்று
வரவேற்றனர்.பூக்கள்ளாலும் சந்தனத்தை கொண்டும் பணிவிடைகள் செய்தனர். தசரதா
வசிட்டரைக் குலகுருவாக கொண்ட உன் தவம் பெரியது. வசிஷ்ட முனிவரின் கருணை
உனக்கிருப்பதால் எல்லாக் காரியங்களும்
சித்தியாகும். உன்னை போன்ற உத்தம அரசனைக் எங்கும் காண இயலாது.
என்னைப்போன்ற
முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் எதாவது துன்பம் என்றால்
மலையில் வீற்றிருக்கும் முருகனிடம் அல்லது முப்பெரும் கடவுளிடம் முறையிடுவோம்.
அங்கெல்லாம் சென்று நிறைவேறாத குறைகளை அயோத்திக்கு வந்து தங்களிடம் வந்து தான்
முறையிடுவோம். விசுவாமித்திரர் இவ்வாறு
பேசியத்தைக் கேட்ட தசரதனின் முகமும் அகமும் மலர்ந்தது.அதனால் அவர் அடியேன் தங்களது
அடிமை நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கட்டளையிடுங்கள் என்றார்.
அதற்கு அவர் நானே சன்னியாசி.
எனக்கு என்ன வேண்டும்? எனக்கு விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. யாகம் மூன்று வகைப்படும்.
1. பகைவரை
அழிப்பது அபிசரா ஹோமம்.
2. தான் உய்யப் பயன் கருதி செய்வது
புத்திர காமேஷ்டி அசுவமேத யாகம்.
3. உலகம் உய்ய யாகம் செய்வது உத்தம
யாகம்.
வேந்தரே உலகம் உய்யப்பயன்
கருதி நல்ல தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்தேன். ஆனால் அதனை
தடுத்து நிறுத்த அரக்கர்கள் இடையூறு செய்கின்றனர். ஆகவே அதற்கு காவல்புரிய ஒருவனை
அனுப்ப வேண்டும் என்றுகூறவும் மன்னன் உடனே சேனதிபதியை அனுப்பிக்கிறேன் என்றார்.
உடனே விசுவாமித்திரர் மன்னனை
பார்த்து உன்னை விட சிறந்தவன் இருக்கின்றான் அவனை அனுப்பு என்று கூறவும், தசரதனோ 10 ரதங்களை வென்றவன் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவனனா சம்பரனை அழித்தவன். தோள் வலிமையும், வாள் வலியும்
கொண்டவன்.என்னை விட சிறந்தவன் அயோத்தியில் யார் இருக்கின்றார் என்று கேட்டார்.
உடனே விசுவாமித்திரரும் உன்னை
விட கோடி மடங்கு உயர்ந்தவனான வேடவித்யான ராமர். மன்னவனே கருமை நிறமும் கருணை
குணமும் கொண்ட ராமரை என்னுடன் அனுப்பு என்று கூறவும் தசரதனுக்கோ புண்ணில் வேல்
பாய்ந்தது போல இருந்தது.. உடனே அவர்க்காலடியில் வீழ்ந்து கண்ணீர் விட்டு ராமன்
சிறு பாலகன். போர் முகம் அறியாதவன். மையத்தில் வல்ல அரக்கர்களை வெல்லும் திறம் அறியாதவன். அடியேன் வந்து அரக்கர்களை வென்று
வேள்வியை முடித்து கொடுப்பேன் என்றார்.